
திருச்சி கே கே நகரில்
வீடு எடுத்து விபச்சாரம்;
3 பேர் கைது –
2 இளம்பெண்கள் மீட்பு.
திருச்சி கே.கே.நகர் செனாய் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கே.கே.நகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .இந்த சோதனையில் 2 இளம்பெண்களை மீட்டனர் .மேலும் இதுதொடர்பாக 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர் .
மீட்கப்பட்ட இளம்பெண்கள் இரண்டு பேரும் காஜாமலையில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

