வெளிநாட்டு தரத்தில் திருச்சி காவேரி மருத்துவமனையில் மூளைக் கட்டி அறுவை சிகிச்சை செயல் இயக்குனர் செங்குட்டுவன் தகவல்.
திருச்சி காவேரி மருத்துவமனையில் உலக மூளைக்கட்டி தினத்தை முன்னிட்டு அதன் செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
மூளையில் ஏற்படும் கட்டிகள் தற்போதைய காலகட்டத்தில் முழுமையாக குணமடைய செய்யப்படுகிறது.
இதன் மூலம் பலர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இதற்கு காவேரி மருத்துவமனையில் திறமையான மருத்துவர்கள், நவீன தொழில்நுட்பங்கள் உள்ளது.
வெளிநாடுகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்த மூளை கட்டி அறுவை சிகிச்சை தற்போது திருச்சியில் மேற்கொள்ளப்படுகி றது.
உலகின் தலைசிறந்த மைக்ராஸ்கோப் எங்கள் வசம் உள்ளது. இதன் மூலம் மூளையின் செல்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்து பார்க்கும் திறன் உள்ளது.
இதனால் அறுவை சிகிச்சை எளிதாக முடிக்கப்படும்.
மூளை கட்டிக்கு அறுவை சிகிச்சை உள்ளது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மூளைக்கட்டி ஏற்பட்டுவிட்டால் பலர் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. எனவே மூளை கட்டிக்கு திருச்சியிலேயே அறுவை சிகிச்சை சிறந்து முறையில் கிடைக்கிறது என்பதை மக்கள் அறியவேண்டும் என்றார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மைய தலைமை மருத்துவர் ஜோஸ் ஜாஸ்பர், மருத்துவர்கள் ராஜேஷ், மதுசூதனன், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.