Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காவல்துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

0

'- Advertisement -

 

திருச்சி மாநகர காவல்துறைக்கும்,
மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தனது நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் “தலைக்கு மேல் தொங்கும் பேராபத்து” என்ற தலைப்பில் திருச்சி மாம்பழச்சாலை போக்குவரத்து சிக்னலுக்கு மேல்புறத்தில் வைக்கப்பட்ட தனியார் விளம்பர பதாகையால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதை மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் சுட்டிகாட்டிருந்தோம். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும்  மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கும் இதனை கொண்டு சென்றோம்.

இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பெயரில் புகார் கொடுத்த அன்றைய தினமே ஸ்ரீரங்கம் ஜே.இ நம்மிடம் பேசி மேற்படி விளம்பர பதாகை வைக்கப்பட்ட இடம் போக்குவரத்து சிக்னல் என்பதால் மாநகர காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.

இதனை தொடர்ந்து மேற்படி தனியார் விளம்பர பதாகை தற்பொழுது அகற்றப்பட்டுள்ளது உள்ளபடியே பெருமகிழ்ச்சி.

மேற்படி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர், திருச்சி மாநகர காவல் ஆணையரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்ற திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவிற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தெரிவித்துகொள்கிறோம்.

இதேபோன்று திருச்சி மாநகர் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி இன்றி பல இடங்களில் குறிப்பாக தலைமை தபால் நிலையம் ,மாவட்ட ஆட்சியர் சாலை,பழைய பால் பண்ணை ரோடு போன்ற முக்கிய சாலைகளில் பழமையான கட்டிடங்கள் மீது (மாநகராட்சி ஏ.சி., ஜே.இ. போன்ற அதிகாரிகள் துணையுடன்)பல டன் எடை கொண்ட இரும்பு சாரங்கள் அமைத்து 50 அடி முதல் 100 அடி வரை நீளமுள்ள விளம்பர பேனர்கள் அமைத்து உள்ளனர்.

இதனையும் நேர்மையாக துடிப்புடன் பணியாற்றிவரும் புதிய திருச்சி மாநகராட்சி ஆணையர் உடனடியாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.