பொதுமக்கள் புகாருக்கு உடனடி தீர்வு .
திருச்சி அரசு மருத்துவமனை புதிய டீன் டாக்டர் நேரு பேட்டி.
திருச்சி கி. ஆ.பெ மருத்துவக் கல்லூரி முதல்வராக டாக்டர் நேரு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் டீன் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
நான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவன். சொந்த மாவட்டத்திற்கு பணிபுரிய வந்துள்ளேன். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய செய்வோம். திருச்சி மருத்துவமனை வளாகம் சுகாதாரமாக வைக்கப்படும்.
படுக்கை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஊழியர் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும். செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து அரசிடம் பேசி சரி செய்யப்படும்.
மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் சரியாக பணி செய்யவில்லை என்றாலும்,ஏதேனும் குறைகள் இருந்தாலும் என்னிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். புகாரின் பேரில் விசாரிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் .
திருச்சி அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இயங்காமல் உள்ள லிப்டை உடனடியாக சீர்செய்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்