திருச்சியில்
இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது.
திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போயின. இதன் பேரில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிரமாக ரோந்து சென்று, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் திருச்சி பொன்னகர் பகுதியில் ஜாஸ்மின் சுல்தான் என்பவரின் மொபட்டை திருடியதாக
நவலூர் குட்டப்பட்டுவை சேர்ந்த முருகவாணன் (வயது 24) என்ற வாலிபரை செஷன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர் .
இதேபோல் திருச்சி கீழே தேவதானம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரது இருசக்கர வாகனத்தை திருடியதாக மணப்பாறையை சேர்ந்த ஜெயபால் (வயது 28) என்ற வாலிபரை கைது செய்தனர். இவர்கள் இருவரிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.