Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி கூட்டம் ரத்து. மநீம கண்டனம் எதிரொலி. தமிழக முதல்வர் நேரில் ஆய்வு.

0

'- Advertisement -

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்ததை சுட்டிகாட்டியது ம.நீ.ம….? இன்று தமிழக முதல்வர் நேரில் ஆய்வு…!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைகளை களைய வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வாடிக்கை. ஆனால் கடந்த வாரம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் நடை பெறவேண்டிய குறைதீர்ப்பு கூட்டம் “நிர்வாக” காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன். திருச்சி மேயர் வேறு அலுவல் பணி காரணமாகவே பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யபட்டிருப்பதாகவும் இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என கண்டனம் தெரிவித்திருந்தோம். மேலும் இதனை தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.

இதனிடையே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டதுடன். திருவாரூரில் இன்று [30.05.2022] ந் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக முதல்வர் இன்று [30.05.2022]ந் தேதி திருச்சி மாநகராட்சி மய்ய அலுவலகத்திற்கு நேரில் ஆய்வு செய்ததுடன் பொதுமக்களிடமிருந்து குறைதீர்ப்பு நாளான இன்று மனுக்களையும் நேரில் பெற்றார்.

பொதுமக்கள் இன்னல்களை சுட்டிகாட்டிய மாத்திரத்திலே அதிரடியாக அதிகாரிகளை இடம்மாற்றம் செய்து. பொதுமக்களின் குறைகளை நேரில் ஆய்வு செய்த தமிழக முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.

என திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.