Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குப்பை போடுவதில் தகராறு.வீடு புகுந்து தாக்கிய 4 பேர் கைது.

0

'- Advertisement -

குப்பை போடுவதில் தகராறு:
வீடு புகுந்து பெண்ணை
தாக்கி நகை பறிப்பு-சூறை’

4 பேர் சிக்கினர்- கணவன்-மனைவி தலைமறைவு

திருச்சி கண்டோன்மெண்ட் பெல்ஸ் ரோடு முடுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் .
இவரது மனைவி ராஜபிரியா (வயது 31). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மனைவிக்கும், ராகப்பிரியாவுக்கும் இடையே குப்பை போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 15 நபர்கள் ராஜபிரியாவின் வீட்டு முன்பு வந்து ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது வீடு புகுந்து வீட்டிலுள்ள பொருட்களை சூறையாடி,
ராஜ பிரியாவின் மாமியாரிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர் .

இது குறித்து ராஜபிரியா கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார்

.புகாரின் பெயரில் ஆறுமுகம் அவரது மனைவி மற்றும் சுப்பிரமணியன், ராம்குமார், விவேக், பாலாஜி மற்றும் சிலர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் சுப்பிரமணியன், ராம்குமார்,விவேக், பாலாஜி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர் .

அவர்களை கண்டோன்மெண்ட் போலீசார் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.