Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழா .

0

'- Advertisement -

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழா.

மக்கள் சக்தி இயக்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, தலைமையிலும், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், மாநில துணை பொதுச் செயலாளர் வெ.ரா.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையிலும் விழா நடைப்பெற்றது.

டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தி மக்கள் சக்தி இயக்கத்தின் 35 ஆம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சி ஐங்ஷன் ரயில்வே (மியூசியம்) அருகாட்சியகம் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

திருச்சி பகுதி பல இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்த்து வரும் பொன்மலை பாலகிருஷ்ணன் அவரை பாராட்டி திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தி புத்தகம் வழங்கப்பட்டது.

டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தி எழுதிய புத்தகங்களை பத்திரிக்கையாளர்கள் அலுவலகத்திலுள்ள(பிரஸ் கிளப்) நூலகத்திற்கு வழங்கப்பட்டது,

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிற்கு 3 சேர்கள் வழங்கப்பட்டது.

அத்துடன் “நெகிழி தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம்” என்று துணிப்பையை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மக்கள் சக்தி இயக்கத்தின் ஆண்டு விழாவிற்கு மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் விஜயகுமார், பாலகிருஷ்ணன், வெங்கடேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன், லலிதா மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.