திருச்சி காந்தி மார்க்கெட்டில் இந்திய நாடார் பேரவை சார்பில் நீர் மோர் பந்தல். மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
இந்திய நாடார் பேரவை சார்பில்
காந்தி மார்க்கெட்டில் நீர் மோர் பந்தல்
மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
இந்திய நாடார் பேரவை சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் மயிலம் சந்தை சப் -ஜெயில் ரோடு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு இந்திய நாடார் பேரவை தலைவர் ஜெ. டி. ஆர்.சுரேஷ் தலைமை தாங்கினார்.
மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மார்க்கெட் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
விழாவில் பேரவையின் மாநில துணைப் பொருளாளர் கே. ஆர்.பி.ராஜா, மாநில கல்வி துணை இயக்குனர் எபினேசர். மாநில ஆலோசனைக் குழு அமைப்பாளர் பொன்ராஜ், மாநில செய்தி தொடர்பாளர் ஞானகுமார்
ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
முன்னதாக மாநில ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரைட் மனோகர் வரவேற்றார். இதில்
மாநகர நிர்வாகிகள் மாநகரச் செயலாளர் ராஜேஷ், புறநகர் செயலாளர் தாமரை முருகேசன் சாமுவேல் ,
ரமேஷ்குமார், செல்வராஜ், பாண்டியன், சரவணன், டி பாண்டியன், பாலக்கரை நாடார் இளைஞர் அணி தலைவர் அய்யனார் நாடார், துணை தலைவர் ஜெயபால் நாடார் ,கே.டி.எம். மளிகை ஜெயக்குமார், தொழிலதிபர் கேடிஎம்.அருண் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆறுமுகம், அருண் பாஷா, சண்முகம், முரளி, ராமச்சந்திரன், தொழிற் சங்க துணைத்தலைவர் வெங்காய மண்டி ராமலிங்கம், பொன்மலை சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர்.