வரும் 18ம் தேதி முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.
14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி
முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது.
ஜோசப் தன்ராஜ் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைப் பொதுச் செயலாளருமான ந. ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.
திருவாரூர் மாவட்ட செயலாளர் ஈவேரா,
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்,
சென்னை மாநகராட்சி செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை கலைக்கப்பட்டு புதிய அமைப்பு குழு மாவட்ட தலைவராக ஜி.முரளி,
மாவட்ட செயலாளராக செல்வகுமார்,
மாவட்ட பொருளாளராக விவேகானந்தன் ஆகியோர்
நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டு அந்த குழுவில் ஆல்பர்ட் சகாயராஜ் ,
சுப்பிரமணியன்,
பத்மநாபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் கு.செல்வகுமார் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கு பின் மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,தமிழக அரசிடம் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 18-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.