Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கும்பகோணம் இதயா கலை அறிவியல் கல்லூரியில் உலக ரெட்கிராஸ் தினம்.

0

'- Advertisement -

 

கும்பகோணம் இதயா கலை அறிவியல் கல்லூரியில் உலக ரெட்கிராஸ் தினம் கொண்டாடப்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் ஆலோசனைப் படியும் கும்பகோணம் இதயா கலை அறிவியல் கல்லூரியில் உலக ரெட் கிராஸ் தினம்  கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக ரெட் கிராஸ் தினம் மற்றும் அதன் வரலாறு பற்றி தலைமையுரை ஆற்றினார்.

அவரைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியின் பேராசிரியருமான முருகானந்தம் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களின் பங்களிப்பையும் மனிதநேயத்தையும் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

இந்த இந்நிகழ்வில் இதயா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். யூஜின் அமலா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வை  இதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் ராதிகா சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இதயா கல்லூரியின் யூத் ரெட் கிராஸ்  தன்னார்வலர்கள் என 300 மாணவிகள் பங்கு பெற்று உலக ரெட் கிராஸ் தினத்தை கொண்டாடினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.