காதல் விவகாரத்தில்
திருச்சி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீசார் விசாரணை
காதல் விவகாரத்தில் திருச்சி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் தன சம்ரிசி ( வயது 18). இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அங்கு ஒரு மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி இதுகுறித்து கல்லூரி பேராசிரியரிடம் கூறியுள்ளார் .இந்த சம்பவத்தை கல்லூரி பேராசிரியர் மாணவன் தனசம்ரிசியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் தனது மகனை கண்டித்ததால் விரக்தியில் இருந்து வந்தார் .இந்நிலையில் கல்லூரி மாணவர் தனசம்ரிசி கல்லூரி விடுதியில் மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பெயரில் கோட்டை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.