திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில்
அனுமதியின்றி பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு
திருச்சி மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் ஒரு பள்ளி அருகே வரவேற்பு பேனர் வைத்ததாக மூன்று பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் மோகன் கொடுத்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.