Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை 39வது வணிகர் தினம் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார்.

0

'- Advertisement -

திருச்சியில் நாளை 39-வது வணிகர் தினம்.
தமிழக வணிகர்
விடியல் மாநாடு,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு நாளை நடக்கிறது இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5ந்தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வணிகர்கள் தங்களது கடைகளையும், நிறுவனங்களையும் மூடி, கொண்டாடி வருகின்றனர். மேலும் அன்றைய தினம் வணிகர்கள் தின மாநாடும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 39-ஆவது வணிகர் தின மாநில மாநாடு திருச்சியில் நாளை (5-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழக வணிகர் விடியல் மாநாடு என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாடு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, முதுபெரும் வணிகர்களுக்கு வ.உ.சி. வணிகச் செம்மல் விருதுகளையும், நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் பி.சி. பார்டியா, தேசிய பொதுச் செயலர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டை தொடக்கி வைத்து பாராட்டி பேசுகின்றனர். மாநாட்டுக்கு பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். மாநிலப் பொதுச் செயலர் கோவிந்தராஜுலு வரவேற்புரையாற்றுகிறார். மாநிலப் பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, மாநாட்டு தீர்மான பிரகடனத்தை வழங்குகிறார்.

தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி. மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். மாநாட்டின் தொடக்கமாக காலை 8.30 மணிக்கு பேரமைப்பு கொடி ஏற்றப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்குகிறார். திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வரவேற்று பேசுகிறார்.காலை 9 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.
காலை 9.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறும். காலை 10 மணிக்கு குத்துவிளக்கேற்றப்படுகிறது. காலை 10.30 மணிககு மாநாட்டுத் தீர்மானங்கள் வாசிக்கப்பபடும். காலை 11 மணிக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும்.நிர்வாகிகளை மாநில துணைத் தலைவரும் திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவருமான எஸ் கந்தன்,மாநில துணை தலைவர்கள் ஆறுமுகப்பெருமாள், எஸ்.ஆர்.வி.கண்ணன், அப்துல் ஜப்பார் ஆகியோர் கவுரவித்து பேசுகின்றனர்.ர் மதிய உணவு இடைவேளைக்குப் பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள், சங்கப் பிரதிநிதிகள்
2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

மாநாட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை (மே 5 ந் தேதி) கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வணிகர்கள், வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளுக்கு விடுமுறை அறிவித்து குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுடன் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அழைப்பு விடுத்துள்ளார்.
முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் நன்றி கூறி பேசுகிறார்.

இந்த மாநாட்டிற்கு வரும் பஸ், கார்கள் நிறுத்தும் வசதியும், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காலை சிற்றுண்டி, மதிய உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் இலவச மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வரும் வியாபார சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு வரவேற்பாளர்கள் மற்றும் வணிக உதவிக்குழுவினர் வழிகாட்டுவார்கள். மாநாட்டுத் திடலில் தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதை வணிகர்கள் பார்வையிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.