ஆட்டோமேஷன் தொழில் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பை
மேம்படுத்துகிறது என திருச்சி பெல் பொது மேலாளர் (பொறியியல்)
எம்.எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
சர்வதேச தன்னியக்கவாக்க சங்கம் (இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஆட்டோமேஷன்)
தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சி மாணவர்கள் பிரிவு (ஐ.எஸ்.ஏ
என்.ஐ.டி திருச்சி), இந்த உலகத்தை மேம்பட்ட இடமாக மாற்றும் ஆட்டோமேஷன்
நிபுணர்களைக் கௌரவிக்கும் வகையில் , ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28 ஆம் தேதி,
சர்வதேச ஆட்டோமேஷன் தொழில் வல்லுநர்கள் தினத்தைக் கொண்டாடுகிறது.
எம்.எஸ்.ரமேஷ், பொது மேலாளர் (பொறியியல்), பெல் திருச்சி, இந்த
விழாவிற்குத் தலைமை வகித்தார்.
ஐஎஸ்ஏ, என்.ஐ.டி திருச்சி மாணவர்கள் பிரிவின் ஆசிரிய ஆலோசகர் பேராசிரியர்
முனைவர்.என் சிவக்குமரன் வரவேற்றார். சர்வதேச ஆட்டோமேஷன் தொழில்
வல்லுநர்கள் தினத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்,
மேலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, திட்ட செயல்பாடுகள்,
ஹேக்கத்தான் போன்ற அதிக போட்டிகளையும், விருந்தினர் உரைகளையும் ஏற்பாடு
செய்யுமாறு மாணவர்களுக்குத் தெரிவித்தார்.
துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் கே தனலட்சுமி கூறுகையில், என்.ஐ.டி
திருச்சியில் உள்ள கருவி மயமாக்கம் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல்
துறை, தொழில்துறை ஆட்டோமேஷன் ஆய்வகத்தில் அதிநவீன வசதிகளைக்
கொண்டுள்ளது. மாணவர்கள் வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும்
சமூகத்திற்கு பெரிய அளவில் உதவும் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதற்காக
அதிக நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம் எனக் கூறினார்.
கார்த்திக் ஆர்.வாரியர், தலைவர், ஐ.எஸ்.ஏ, என்.ஐ.டி திருச்சி
மாணவர்கள் பிரிவு , இதுவரை நடத்தப்பட்ட செயல்பாடுகளை பட்டியலிட்டதுடன் ,
எதிர்காலத் திட்டங்களையும் தெரிவித்தார்.
எம்.எஸ்.ரமேஷ், பொது மேலாளர் (பொறியியல்), பெல், திருச்சி
சர்வதேச ஆட்டோமேஷன் தொழில் வல்லுநர்கள் தினத்தை முன்னிட்டு
அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆட்டோமேஷனை மையக்
கருப்பொருளாகக் கொண்டு பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினார்.
தொழில்துறைக் களத்தின் பல்வேறு செயல்பாடுகளில் உள்ள ஆட்டோமேஷனுக்கான
பல்வேறு சாத்தியக்கூறுகள் மற்றும் அதன் வகைகள், தற்போதைய
தொழில்நுட்பங்கள் மற்றும் கம்ப்யூட்டர் விஷன், செயற்கை நுண்ணறிவு ,
மெஷின் லேர்னிங் (ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்), டீப் லேர்னிங் மற்றும்
சென்டிமென்ட் டூல்ஸ் போன்றவற்றைக் குறித்தும், அவற்றைத் தொழிற்துறையில்
செயல்படுத்துவது குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
எதிர்காலத்தில் உற்பத்தித் தொழில்களின் முன்னேற்றத்திற்கு தொழில்துறை 4.0
இன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். பங்கேற்பாளர்கள்
மின்னணுமயமாக்கலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டனர் மற்றும்
டிஜிட்டல் இரட்டையரை உருவாக்குதல் எவ்வாறு ஆட்டோமேஷனைச்
செயல்படுத்துகிறது மற்றும் வெவ்வேறு செயல்முறைகளுக்கு அதிக செயல்திறனைக்
கொண்டு வருவது குறித்து எடுத்துரைத்தார்.
தொழில்துறையின் சமீபத்திய போக்குகள் மற்றும் எதிர்காலத்தில் ஆட்டோமேஷனின்
பங்கு குறித்து பங்கேற்பாளர்கள் அறிந்து கொண்டனர் மற்றும் மாணவர்கள்
மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இத்துறை குறித்து மென்மேலும் அறிந்து கொள்ள
வலியுறுத்தினார்கள்.
உற்பத்தி, செயல்முறைகள், ஆட்டோமொபைல்கள் போன்றவற்றின் வளர்ச்சியை,
உற்பத்தித்திறனை அதிகரிப்பது எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்பதையும்
அவர் மேற்கோள் காட்டினார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.சீனிவாசன் நன்றி கூறினார்.
பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும்
மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர் .