திருச்சி செந்தண்ணீர்புரத்தில் பணம் தராமல் ஏமாற்றியதால் மன உளைச்சலில் பேக்கரி மாஸ்டர் தூக்கு மாட்டி தற்கொலை.
பொன்மலை போலீசார் விசாரணை.
திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சேகர் வயது (60) இவர் பாலக்கரையில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். 7 gமாதத்திற்கு முன்னர் ஏலச்சீட்டில் 2 லட்சம் பணம் எடுத்து ஒருவரிடம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அந்த நபர் 2 மாத வட்டி பணம் கொடுத்து விட்டு மீதம் 4 மாதமாக வட்டி பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். அந்த நபரை பற்றி காந்தி மார்க்கெட் பகுதியில் விசாரித்தபோது அவர் பல நபர்களிடம் கடன் வாங்கிய தலைமறைவாகி விட்டதாகவும் அவர் முகவரி தெரியவில்லை எனவும் அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர் ஏல சீட்டு பணம் கட்ட முடியாமல் தவித்து வந்த சேகர் மன உளைச்சலில் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் புலம்பியுள்ளார்.
இந்நிலையில் திடீரென வீட்டில் சமையல் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவரது மகன் பிரவீன் குமார் (34) அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.