இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் 10ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலிவடைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
இளங்கனல் தொண்டு நிறுவனம் – ஆரோக்கிய உணவு திட்டம் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கியது.
இளங்கனல் தொண்டு நிறுவனத்தின்
பத்தாம் ஆண்டின் துவக்க விழா நிகழ்வாக ஏழை, எளிய குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் ஆரோக்கியத்தை வளர்க்க குழந்தைகளை தத்தெடுத்து ஆரோக்கிய உணவு திட்டம் மூலம் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கி வருகிறது.
அவ்வகையில் 27.04.2022 அன்று புனித பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் மிகவும் நலிவடைந்த குடும்பங்களை தத்தெடுத்து அக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் கிராப்பட்டி மறைவட்ட அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்திரு ஜோ.ஜோ. லாரன்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி. அருள்மேரி முன்னிலை வகித்தார். பத்திரிக்கை ஆசிரியர் நிறுவனர் சதாசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நலிவடைந்த குடும்பங்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கி தந்தை அவர்கள் தலைமை உரையாற்றினார். தலைமை ஆசிரியை அருட்சகோதரி குழந்தைகளுக்காக சிறப்பு வழிபாடு செய்து ஊட்டச்சத்துக்கள் பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் ஆண்டனி, கிறிஸ்டி, ரூபிகா, யுவராணி மற்றும் நிமலன் ஆகியோர் நிகழ்ச்சியை வழி நடத்தினர்.
தொண்டு நிறுவனத்தின் தலைவர் க. ரஞ்சித் குமார், இணைச் செயலர். அ. அந்தோணி ஜெய்கர், பொருளர்
ஜோ. அற்புத சகாயராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரிய பெருமக்களும், பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.