ஸ்ரீரங்கம் சித்தரை தேர் திருவிழாவிற்கான பாதுகாப்பை மேம்படுத்தவேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கிஷோர் குமார் கோரிக்கை.
தமிழக கிஷோர் குமார் பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழா கோலம் பூண்டிருக்கும் என்பது வாடிக்கை. அந்த வகையில் சுட்டெரிக்கும் சூரியனையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தமிழக ஆன்மீக பெருமக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கான வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள்.
மேலும் கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா லாக்டவுன் என்பதால் திருகோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் தற்பொழுது முன்பைகாட்டிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் தமிழக கோவில்களில் கூடிவிடுகின்றன. மேலும் இவ்வாறு ஏற்பட்ட அதீத கூட்டத்தின் காரணமா மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழாவின் பொழுது இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டது. மேலும் முறையாக திட்டமிடபடாததால் தஞ்சை மாவட்ட தேர் திருவிழாவின் பொழுது மிகபெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனையை அதிகரிக்கிறது.
மேலும் வரும் 29.04.2022 ந் தேதி வெள்ளிக்கிழமை பூலோக வைகுண்டமாம் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் சித்திரை தேர்திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது.
மேற்படி சித்திரை தேர்திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு “உள்ளூர் விடுமுறையை” மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மேற்படி தேர்திருவிழாவின் பொழுது கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே திருச்சி மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்து நடைபெறயிருக்க கூடிய ஸ்ரீங்கம் சித்திரை தேர் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தி உறுதிபடுத்துவதோடு, மேற்படி தேர்திருவிழா அமைதியான முறையில் நடைபெற மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.