Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் மீண்டும் கொரோனா. 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.

0

'- Advertisement -

 

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், ஏற்கனவே, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பெவாக்ஸ் தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சமயத்தில் இந்தியாவில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு DCGI (Drugs Controller General of India) நேற்று ஒப்புதல் வழங்கியிருந்தது.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்க கூடிய நிலையில், அவசர கால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.