Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதி.எஸ்.பி. ஜெயக்குமார் தகவல்.

0

ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் தந்தால் ரூ.50 லட்சம் வெகுமதி
எஸ்.பி. ஜெயக்குமார் தகவல்.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு சகோதரரும் தொழிலதிபருமான கே. என்.ராமஜெயம் கடந்த 2012ஆம் வருடம் மார்ச் 29ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிபிசிஐடி ,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இருந்த போதிலும் இதுவரை துப்பு துலங்கவில்லை .
இந்த நிலையில் ராமஜெயத்தின் இன்னொரு சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கினால் மீண்டும் வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று சிறப்பு புலனாய்வு குழு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்:

இந்த கொலை வழக்கு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது தகவல்கள், கடிதங்கள் மற்றும் கைபேசி குறுஞ்செய்தி பெறப்பட்டு வருகிறது.

அவ்வாறு பெறப்பட்ட தகவலை இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் இந்த வழக்கை துப்பு துலக்க சரியான தகவல் தருபவர்களுக்கு ரூ. 50 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்பி. ஜெயக்குமார் கூறும்போது, இந்த கொலை வழக்கு தொடர்பாக 6 போலீஸ் அதிகாரிகள் உட்பட 198 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராமஜெயத்தின் மனைவி மற்றும் உறவினர்கள் மட்டுமல்லாமல் அமைச்சரிடமும் இரண்டு முறை விசாரித்து உள்ளோம்.

அவர்களின் குடும்பத்தினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். ராமஜெயத்தின் தொழில் தொடர்பில் இருந்து தற்போது வெளிநாட்டில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படுவார்கள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.