திமுக நகர செயலாளர், பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர் பதவிக்கான விருப்பமனு திருச்சியில் இன்று வழங்கப்பட்டது..
திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் இன்று முதல் 28- ம் தேதி வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.
இதனை அடுத்து திருச்சி திமுக மாவட்ட அலுவலகத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் மனுக்கள் வழங்கப்பட்டது,

திமுக நகர செயலாளர், பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர் தேர்தலுக்கான விருப்ப மனுவை மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி வழங்கினார் .
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட இந்த விருப்ப மனுக்களை தலைமை கழக பிரதிநிதி பி.டி.சி செல்வராஜ் இடம் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மல்லியம்பத்து, கதிர்வேல், தமிழ்செல்வன், கே.கே.ஆர் சேகரன், லால்குடி நகர செயலாளர் துரை, அவைத்தலைவர் அம்பிகாபதி,
டோல்கேட் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…