இன்றைய (22-04-2022) ராசி பலன்கள்
மேஷம்
பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். தொழிற்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். மேன்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : மேன்மையான நாள்.
கிருத்திகை : சேமிப்பு மேம்படும்.
—————————————
ரிஷபம்
கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணியில் சக ஊழியர்களிடம் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
ரோகிணி : விழிப்புணர்வு வேண்டும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
—————————————
மிதுனம்
கௌரவ பதவியின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். புதுமண தம்பதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்திருந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான சிக்கல்கள் குறையும். வர்த்தக பணிகளில் தனவரவு மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : சிக்கல்கள் குறையும்.
புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.
—————————————
கடகம்
கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனையின் மூலம் மனதில் இருக்கும் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.
பூசம் : முயற்சிகள் சாதகமாகும்.
ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.
—————————————
சிம்மம்
புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : மேன்மை உண்டாகும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
—————————————
கன்னி
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான செல்வாக்கு மேம்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திரம் : தாமதங்கள் குறையும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : செல்வாக்கு மேம்படும்.
—————————————
துலாம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
—————————————
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
—————————————
தனுசு
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். திருப்திகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : பொலிவு உண்டாகும்.
—————————————
மகரம்
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விஷயங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
திருவோணம் : மேன்மையான நாள்.
அவிட்டம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
—————————————
கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : கலகலப்பான நாள்.
சதயம் : தீர்வு கிடைக்கும்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.
————————————–
மீனம்
அரசு தொடர்பான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : உதவி கிடைக்கும்.
உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.
—————————————