திருச்சியில் தனியார் வங்கி ஊழியர் தூக்கு போட்டு சாவு.
திருச்சி உறையூர் நடுவைக்கோல் காரத் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் மதன்குமார் (வயது 26). தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஆண்டு சேலம் பகுதியில் நடந்த விபத்தில் வலது கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .இதனால் விரக்தியடைந்த இவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதன்குமார் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை மணி கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.