திருச்சியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்.போலீசார் விசாரணை.
திருச்சி பாபு ரோடு சானிய குலதெருவை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 38). குடிப்பழக்கம் உடைய இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி நாகலட்சுமி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில் வீட்டில் துர்நாற்றம் வீசியதால் உடனடியாக வீட்டின் உரிமையாளர் இவரது மனைவி நாகலட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது, வீட்டில் அழுகிய நிலையில் விஜயராகவன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மர்மமான முறையில் இறந்த விஜயராகவன் குறித்து போலீசார் இது கொலையா? தற்கொலையா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.