முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வழிமறித்து புரட்சித் தாய் சின்னம்மா வாழ்க என கோஷமிட்ட திருச்சி ஒத்தக்கடை செந்தில்.
டி.ஜெயக்குமார் காரை வழிமறித்து கோஷமிட்ட முன்னாள் அ.தி.மு.க.நிர்வாகி ஒத்தக்கடை செந்தில்.
திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் நிபந்தனையின் பேரில் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட்டார்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்து விட்டு காரில் ஏறி, தான் தங்கி இருந்த ஓட்டலுக்கு புறப்பட்டார்.
அப்போது அருகில் உள்ள கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு , அ.தி.மு.க. கொடியுடன் நின்று கொண்டிருந்த அ.தி.மு.க.முன்னாள் ஜங்சன் பகுதி பொருளாளரான ஒத்தக்கடை செந்தில், டி.ஜெயக்குமார் காரை வழிமறித்து, நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க .. ! என கோஷமிட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பல முறை உரத்த குரலில் கோஷமிட்ட அவரை, போலீசார் விரைந்து சென்று அங்கிருந்து நைசாக தள்ளிச்சென்றனர்.
1987-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்து வரும் ஒத்தக்கடை செந்தில், தனது கையில் ஜெயலலிதா படம் மற்றும் இரட்டை இலை சின்னத்தை பச்சை குத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே முதல் முறையாக சின்னம்மா பேரவையை தொடங்கி நடத்தியவர் இவர். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக உள்ளார்.