திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் சிறுநீரக தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம்.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு (10,11,12) சிறுநீரக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் பற்றிய முகாம், ஆலோசனைகள் இலவசமாக நடைபெறுகிறது.
உலக
சுகாதார அமைப்பு 2022 ஆண்டை “ஆரோக்கியமான சிறுநீரகம் அனைவருக்கும்” என்று அறிவித்துள்ளது.
உலக சிறுநீரக தினத்தில் டாக்டர். கணேஷ் அரவிந்த் அவர்கள் பொது மக்கள் மற்றும் மருத்தவ மாணவர்களுக்கு சிறுநீரக நோய் வராமல் தடுக்கும் முறைகளைப் பற்றி விளக்கினார். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

சிறுநீரக தொற்று, சிறுநீரக செயலிழப்பு, இரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் (முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில்) செய்து பல நோயாளிகளை காப்பாற்றியுள்ளார்.
நமது சமுதாய அமைப்புக்கேற்றவாறு அனைத்து நோயாளிகளும் பயன்பெறும் வகையில், சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைகள் (URS,PCNL, RIRS) சிறுநீரக கட்டி அறுவை சிகிச்சைகள் (நவீன Laparoscopy முறையில்), மூத்திரப்பாதை அடைப்பு Prostate அறுவை சிகிச்சை (Laser), சிறுநீரகம், மூத்திரப்பை அதனை சார்ந்த உறுப்புகளில் வரும் சாதாரண கட்டிகள் முதல் புற்று நோய் கட்டிகள் வரை டாக்டர். கார்த்திக்கேயன் அவர்கள் சிறப்பான அறுவை சிகிச்சைகள் செய்து எண்ணற்ற நோயாளிகளை குணப்படுத்தியுள்ளார்.
ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் அனைத்து சிறுநீரக நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
சிறுநீரக தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தான பேரணி மருத்துவமனை சார்பாக நடைப்பெற்றது.
ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்களுக்கு மற்ற அறுவை சிகிச்சைகள் உதாரணமாக பித்தப்பை கல், எலும்பு முறிவு, மூளை கட்டி மற்றும் மகளிர் நோய் (கர்பப்பை கட்டிகள்) அறுவை சிகிச்சைகள் செய்ய அனைத்து நவீன வசதிகளும் மற்றும் அனுபவமிக்க மருத்துவ குழுவும் உள்ளது.