ஸ்ரீரங்கம் மூல தோப்பில் ரூ.1.60 கோடியில் கட்டி 4 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பள்ளி கட்டிடம்.நடவடிக்கை எடுப்பாரா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்? மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார்.
“கட்டிடம் கட்டியாச்சு..! கமிஷன் பாத்தாச்சு….? பிள்ளைங்க படிச்சா என்ன…! வெளவால் கூடுகட்டுனா நமக்கு என்ன….?
அலட்சிய அதிகாரிகள்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, இ.பி.டவர் ஸ்டேசன் அருகில் கடந்த 2018ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 1-கோடியே 60-இலட்ச ரூபாய் செலவில் அய்யனார் மேல்நிலை பள்ளிக்கான கூடுதல் கட்டிட வளாகத்தை அப்பொழுதைய முதல்வர் பழனிசாமி துவங்கி வைத்து இன்றுடன் நான்காண்டுகள் உருண்டோடிவிட்டன.
ஆனால் கோடிகள் செலவு செய்து மக்கள் வரி பணத்தில் கட்டிய மேற்படி கட்டிடத்தில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு பயன்பாட்டுக்கு இன்று வரை வரவில்லை என்பது வேதனை. இந்த பொறுப்பற்ற செயலுக்கு காரணமான திருச்சி மாவட்ட கல்வி துறையை சார்ந்த அதிகாரிகளையும், பொது பணித்துறை அதிகாரிகளுக்கு திருச்சி தென் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம்.
எனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் திருச்சி, ஸ்ரீரங்கம், மூலத்தோப்பில் அமைந்துள்ள அய்யனார் மேல்நிலைப்பள்ளியின் கூடுதல் கட்டிடத்தை நடப்பு கல்வி ஆண்டிலேயே வரவிருக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மையமாகவும், அதனை தொடர்ந்து அய்யனார் பள்ளி மாணவர்கள் பயன்படும் வண்ணம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் நீதி மய்யம் கட்சி தென் மேற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
என திருச்சி தென்மேற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்
வக்கீல்.S.R.கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.