திருச்சி எ.புதூர் போஸ்ட் மாஸ்டர் குமார் மறைவிற்கு டாக்டர் சுப்பையா பாண்டியன்,ஜான் ராஜ்குமார் இரங்கல்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போஸ்ட் மாஸ்டர் குமார் மறைவுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன், ஜான் ராஜ்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை, அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகள் கூறியிருப்பதாவது:
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போஸ்ட் மாஸ்டர் கே.குமார் இன்று (7ம் தேதி) அதிகாலை காலமானார்.
அவரை இழந்து தவிக்கும் மனைவி, மகள், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
பழகுவதற்கு எளிமையும், நட்பிற்கு இலக்கணமாகவும், நட்புக்கு ஏற்ற ஒரு நல்ல நண்பரான அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு டாக்டர் சுப்பையா பாண்டியன்,டாக்டர் ஜான் ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.