திருச்சி துணை மேயர் பதவியேற்பு நிகழ்வில் திமுக தொண்டர்களுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர்களை வெளியேற சொன்ன மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான்.
திருச்சி மாமன்ற துணை மேயர் பதவி ஏற்பு விழாவில் பத்திரிக்கையாளர்களை வெளியேற சொன்ன மாநகராட்சி ஆணையர்.
திருச்சியில் மாமன்ற துணை மேயர் பதவி ஏற்பு விழா மதியம் 2.30 மணிக்கு நடைபெற்றது.
மாமன்ற கூட்ட அரங்கில் 65 கவுன்சிலர்கள் மட்டும் இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும் கூடி இருந்தனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது திமுக தொண்டர்களும் பதவியேற்பு மேடை அருகே குவிந்து நின்றனர். இதனால் பத்திரிகை,ஊடக புகைப்படக் கலைஞர்கள் படம் எடுக்க முடியாமல் தவித்தனர்.

அப்போது அங்கு நின்ற இந்து பத்திரிகை புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுக்க இடையூறாக நின்ற மாநகராட்சி ஒப்பந்ததாரர் ராஜேஷ் என்பவரை சற்று தள்ளி நிற்கும்படி கூறினார். இதனால் திமுக தொண்டர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைக்கண்ட மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் திமுக தொண்டர்களுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசி புகைப்பட கலைஞர்களுக்கு இங்கு அனுமதி இல்லை நீங்கள் அனைவரும் வெளியே செல்லுங்கள் என அடாவடியாக கூறினார்.
மேலும் இந்து ஆங்கில பத்திரிகை புகைப்படக் கலைஞரை பார்த்து உங்கள் பத்திரிக்கை தினமும் வெளிவருகிறதா ?அரங்கத்தில் உள்ள திமுக தொண்டர்களை வெளியேறச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் முதலில் வெளியே செல்லுங்கள் என பத்திரிக்கையாளர்களை அசிங்க படுத்தினார்.
முன்னதாக கூட்ட அரங்கின் உள் திமுக தொண்டர்கள் முண்டியடித்து சென்றதால் வாயில் கதவு பெயர்ந்து வந்தது.
(இந்த சம்பவத்துக்குப் பின் மாநகராட்சி ஊழியர் ஒருவர் இவர் முன்னணி ஆங்கில பத்திரிக்கை புகைப்படக்கலைஞர் என ஆணையர் முஜிபூர் ரகுமானிடம் கூறியதற்கு யாராக இருந்தால் எனக்கென்ன நான் முதன்மை செயலாளரால் நியமிக்கப்பட்டவர் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறியதாக தகவல்).
திருச்சி மேயர்,துணை மேயர் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலேயே இப்படி என்றால் இனி ….