ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே மரணம் அடைந்தார். தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52.
ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708- விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷேன் வார்னே, 2007- ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
ஷேன் வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.