திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகரசபை 27 வார்டுக்கான உறுப்பினர்கான தேர்தல் கடந்த 19.02.2022 அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
பின்னர் வாக்கு என்னும் பணி கடந்த 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க.
வேட்பாளர்கள் 11 பேரும், தி.மு.க.சார்பில் 08, பேரும், கம்யூனிஸ்ட் -02 , காங்கிரஸ் -01 ,சுயேட்சை வேட்பாளர்கள் – 05 பேர் வெற்றிபெற்றனர்.
இதில் தி.மு.க. அதிருப்தி வேட்பாளராக களம் கண்ட சுயேட்சைகள் 5 பேரும் வெற்றி பெற்றவுடன் தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதாக கூறி நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து தி.மு.க.விற்கு ஆதரவளித்த நிலையில் தி.மு.க. கூட்டணியின் 11 வேட்பாளர்கள் சுயேட்சை 5 பேர் மொத்தம் 16 உறுப்பினர்கள் தி.மு.க.விற்கு ஆதரவாக இருந்த நிலையில்,
இன்று 04ம் தேதி நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் மணப்பாறை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் ரகசிய வாக்கெடுப்பில் தி.மு.க.சார்பில் நகர செயலாளரும் 25 வது வார்டு உறுப்பினருமான கீதா. மைக்கேல்ராஜ், அதிமுக சார்பில் 18 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பா.சுதா போட்டியிட்டார்.
இதில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட கீதா.ஆ.மைக்கேல்ராஜ் 12 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் பா.சுதா 15 வாக்குகள் பெற்று மணப்பாறை நகர்மன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.
போதிய ஆதரவு இருந்த நிலையில் தி.மு.க.வசம் இருந்த நகர்மன்றத்தை முதல்முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியது.
இது.தி.மு.க.வினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை செய்தியாளர்: S.K.சபியுல்லா