தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை 12வது வார்டில் நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட்டம்.
மணப்பாறையில் திமுகவினர் சார்பில் தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா .
திருச்சி மாவட்டம் மணப்பாறை 12 வது வார்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவிற்கு திமுக நிர்வாகி பி .எல். கிருஷ்ணகோபால் தலைமையில் திமுக கொடி ஏற்றப்பட்டது.
மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் .
மேலும் மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
விழாவில் 12வது வட்ட பிரதிநிதி குமரகுருபரன், பேக்கரி செந்தில், வட்டச் செயலாளர் ஜெயம் கார்த்திக், டாக்டர் .முருகானந்தம், ஆர்.வி.எஸ். சரவணன், (மாவட்ட பிரதிநிதி) தொண்டர் அணி அன்பரசன், ஏகநாதன் ,மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்த சி. எம். எஸ். ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

