திருச்சியில் மார்ச் 21ம் தேதி நடைபெறும் ஐசிஎப் பேராயம் சார்பில்
கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாட்டு அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பேராயர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
பேராசிரியர் டாக்டர் அருள் முன்னிலை வகித்தார்.
மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சிபி ரமேஷ் கலந்து கொண்டு முதல் அழைப்பிதழை பெற்றார்.
மேலும் திருச்சி பாஸ்டர் இராஜன் மற்றும் இசிசி மாநில பொதுச் செயலாளர் டேவிட் பரமானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மாநாட்டிற்கு இன்னும் 27 நாட்களே உள்ள நிலையில் பத்திரிக்கையை வெளியிடப்பட்டு அழைப்பிதழ் வெளியிடப்பட்டு நாளை தமிழகம் முழுவதும் இந்த பத்திரிக்கை தபால் மற்றும் கொரியர் மூலமாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மாநாட்டினுடைய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் மற்ற அனைத்துப் பணிகளும் மிக விரைவாக துரிதமாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
திருச்சியில் இருக்கக்கூடிய முக்கிய பேராயர்கள், திருச்சபை போதகர்கள், அனைத்து திருச்சபை ஆயர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.
பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.