மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவக வாளகத்தில் தோழர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி செலுத்த பட்டது.
இன் நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார்.
நகர செயலாளர் ஜனசக்தி உசேன் முன்னிலை வகித்தார்.
திருச்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி புகழ் உரை நிகழ்த்தினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சௌக்கத்அலி, ராகமத்துனிஷா, நல்லுச்சாமி, ராஜேந்திரன், பெருமாள், ஒன்றியகுழு உறுப்பினர்கள் சின்னகண்ணு, குருசாமி, பெண்ணுச்சாமி, போக்குவரத்து கழக மண்டல செயலாளர் சுப்ரமணியன், கண்ணண், ஜெயராஜ், நகரக்குழு உறுப்பினர்கள் மரியராஜ், லாரன்ஸ், அஸ்லாம், ரேணுகா, ஜெயலெட்சுமி, செல்வி, வீரமணி, சாலிக் துரைசாமி, கௌதமன், கார்த்திக் உட்பட நகர ஒன்றிய நிர்வாகிகள் மலர் தூவி மலர் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.