Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நெருப்புடா நெருங்குடா பார்ப்போம். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பரபரப்பு போஸ்டர்.

0

நெருப்புடா… நெருங்குடா பார்ப்போம்.. மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் பரபரக்கும் போஸ்டர்

ஸ்டாலினின் சாதனைகள், போராட்டங்கள், குடும்ப நிகழ்வுகள் என பல பரிமாணங்கள் கொண்ட 70 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் நெருப்புடா… தமிழகத்தை நெருங்குடா பார்க்கலாம் என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

திமுக தலைவர்
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை லங்கா கார்னர் உட்பட பல்வேறு இடங்களில்  70 புகைப்படங்கள் கொண்ட பிரம்மாண்ட போஸ்டரை திமுகவினர் ஒட்டியுள்ளனர். அதில்  நெருப்புடா இனி தமிழகத்தை நெருங்குடா பார்க்கலாம் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமா மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் என்பதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு திமுகவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் லங்கா கார்னர் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ஸ்டாலினின் சாதனைகள், போராட்டங்கள், குடும்ப நிகழ்வுகள் என பல பரிமாணங்கள் கொண்ட 70 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் நெருப்புடா… தமிழகத்தை நெருங்குடா பார்க்கலாம் என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

திமுக கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மசூது என்பவர் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது. எனினும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. கோவை இனி தங்கள் கோட்டை என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர்.

இதனை தெரிவிக்கும் விதமாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.