வாழ்வின் உயிர்ப்பு
ஓவியக் கண்காட்சி
டிசைன் ஓவிய பள்ளி சார்பில் திருச்சியில் பிப்ரவரி 26, 27, 28 மூன்று நாட்கள் ஓவியக் கண்காட்சி திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா ஹாலில் காலை 10 மணி முதல் இரவு ஏழு மணி வரை நடைபெறுகிறது.
கொரொனா தீநுண்மி பெருந்தொற்று
காலங்களில் ஓவிய மாணவர்கள் வாழ்வின் உயிர்ப்பு தலைப்பில் முப்பத்தி எட்டு மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் நான்கு ஓவியங்களை வரைந்துள்ளார்கள்.
அந்த ஓவியங்களை காட்சி படுத்தினார்கள். ஓவியக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றன. கண்காட்சியினை
டைரி சகா, ஓவியர் சிவபாலன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
ஓவியக்கலையானது பல்வேறு ஆக்கத்திறன்களை, ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் சமூகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்களை
பல்வேறு வகையான
எண்ணெய் ஓவியம்
(Oil painting) ,
வண்ணக்கோல்
(Pastel painting) ,
செயற்கை வண்ணக் கூழ்மங்கள்
(Acrylic painting),
நீர்வர்ண ஓவியம்
(Watercolor painting),
மை ஓவியங்கள்
(Ink Painting),
பூச்சு ஓவியங்கள் (Enamel painting)
என
வண்ண
கலவை பகுதியில் கருத்தியல் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளின் செறிவினை மாணவர்கள் காட்சிப் படுத்தி இருந்தனர். அது படைப்பாளியின் அணுகுமுறையினை
கருத்தியலை எடுத்துரைத்தது.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டியும் நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவில் கவிஞர் நந்தலாலா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜ், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா பிரிகேட் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசளித்து சிறப்பிக்கிறார்கள்
ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் செய்திருந்தனர். பொதுமக்கள் அனைவரும் ஓவியக் கண்காட்சியை கண்டு களிக்கலாம். அனுமதி இலவசம்.