வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பதிவு செய்த 9-வது வெற்றி இதுவாகும்.
முன்னதாக ஒருநாள் தொடரையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.
இந்நிலையில், ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
இதன்படி 269 ரேட்டிங் புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்தது.
ஏற்கனவே 2016 பிப்ரவரி 12 முதல் மே 3 வரை மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.