வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற திருச்சி கலெக்டருக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி வேண்டுகோள்.
திருச்சி முன்னாள் அமைச்சரும், புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நாளை (22.02.2022) நடைபெற இருப்பதால்
வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வித முறைகேடும் இல்லாமல், வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .
என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.