திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேர் புதிய உலக சாதனை.
திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள்பள்ளி மாணவி நித்யஸ்ரீ. இவர் 4 நிமிடத்தில் ஆரஞ்சு பழத்தை மூக்கால் 100 மீட்டர் தூரம் தள்ளி புதிய உலக சாதனை படைத்தார்.
அதேபோல் கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி சாய்னா ஜெட்லி தனது16-வது சாதனையாக 4 நிமிடத்தில் 100 மீட்டர் தூரம் ஆரஞ்சு பழத்தை மூக்கால் தள்ளி புதிய உலக சாதனை படைத்தார்.
ஸ்ரீ ஜெயேந்திர மெட்ரிக் பள்ளி மாணவர் ஷியாம் சுந்தர் ஐஸ் மேல் சிட்டப்ஸ் ஒரு நிமிடத்தில் 60 முறை செய்து புதிய உலக சாதனை படைத்தார்.
சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவர் ரோகித் ஐஸ் மேல் நின்று 15 கிலோ எடையுடன் ஒரு நிமிடத்தில் 45 முறை தோப்புக்கரணம் (சிட்டப்ஸ்) போட்டு புதிய சாதனை படைத்தார்.
மேலும் எஸ்.டி.ஜேம்ஸ் அகாடமி பள்ளி மாணவர் ஸ்ரீதர்ஷன் ஐஸ் மேல் நின்று 1¼ கிலோ எடையை நெற்றியில் 3 நிமிடம் வைத்து பேலன்ஸ் செய்தார்.
ஆர்.சி பள்ளி மாணவர் ஹரிஷ் தலைகீழாக நின்று ஒரு நிமிடத்தில் உடலை 4 மீட்டர் தூரம் உடலை தலையால் நகர்த்தினார்.
இந்த 6 புதிய உலகசாதனைகளையும் நேரில் ஆய்வு செய்து கராத்தே வீரர் டிராகன் ஜெட்லீ மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் சற்குருநாதன், முத்து மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு, சான்றிதழ் பதக்கம் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கராத்தே, யோகா செல்லும் மாணவ- மாணவிகளும், கின்னஸ் உலக சாதனையாளர்கள் செந்தில்குமார், கோகுல், டாக்டர் அருண் சுந்தர் ஜெட் டிஸ் சோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.