சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட
இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.
விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 28). இவர் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி, சாலை விபத்தில் காயமடைந்தார்.
தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் இயன்ற வரை போராடியும் இளைஞரை காப்பாற்ற முடியவில்லை.
வெள்ளிக்கிழமை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து,
துரிதமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம், இளைஞரின் உடல் உறுப்பு தானம் செய்தால் 5 பேரது வாழ்க்கைக்கு பயனளிக்கும் என அவரது குடும்பத்தாரிடம் எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து இளைஞரின் உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
பின்னர் உரிய விதிமுறைகளுடன் இளைஞரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டு,
5 பேருக்கு நேற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மருத்துவர் விஜய்கண்ணா தலைமையிலான குழுவினர், மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, எஸ்.ஆர்.எம். குழும தலைவர் சிவக்குமார் ஆகியோர் ஆலோசனையின் பேரில் செய்திருந்தனர்.