நீதிபதி கற்பகவிநாயகம் அவர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் பாராட்டு விழா.
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக கோவையில் உள்ள பந்தய சாலை அருகிலுள்ள அப்பாசாமி கல்லூரி எதிர்புறம் மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேலு அவர்களின் அரங்கத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் எம்.கற்பக விநாயகம் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேல், பாலசுப்ரமணியன், டி.கே. கார்த்திகேயன், ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீதியரசர் எம்.கற்பக விநாயகம் விழாவிற்கு வருகை புரிந்த போது சின்னஞ்சிறு குழந்தைகள் புன்னகையுடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இவ்விழாவில் சமூக பணிகளை சிறப்பாக செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிபுரிந்தமைக்காக AIPRLAO அமைப்பின் திருச்சி மாவட்ட துணைத்தலைவரும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளருமான ஆர். ஏ. தாமஸ் அவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது விழாவில் ஏற்புரை ஆற்றிய நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்கள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது தயங்காமல் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்,ஜாதி மதங்களை கடந்து மனிதர்களை நேசிக்க வேண்டும் உண்மை நேர்மை நாம் நமது வாழ்க்கையில் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்வில் சிறப்பாக சமூக பணியாற்றி வருபவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்திலிருந்து ஆர். ஏ. தாமஸ் ஒருங்கிணைப்பில் சிவா, மைக்கேல்,ஜோன், ஆலன் ரூடால்ப்,இயன்,ரெஜி, பிரபு ,அஸ்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் உதகை, சென்னை,சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்பின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.