நீளக்குவளை (Mug) சின்னத்தில் 47வது வார்டில் போட்டியிடும் J.சார்லஸ் டிக்கன்ஸ். பொது மக்கள் அமோக வரவேற்பு.
திருச்சி 47வது வார்டில் நீளக் குவளை (Mug) சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஜெ.சார்லஸ் டிக்கன்ஸ் அவர்களுக்கு பொதுமக்களிடையே அமோக ஆதரவு.
மக்கள் மக்களோடு மக்களாக பழகி வருபவர் நாற்பத்தி ஏழாவது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் சார்லஸ்.
இதே பகுதியில் பிறந்து வளர்ந்தவர்.
படித்த பட்டதாரியான இவர் மக்களுக்கு சேவை செய்வதையே எண்ணமாக கொண்டவர்.சிறந்த விளையாட்டு வீரரும் கூட ஆவார்.
மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணி, பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தற்போது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
திமுக அதிமுக வேட்பாளர்கள் பலரும் ஓட்டுக்காக சாக்கடை அள்ளுவது,
தெருக்களை கூட்டுவது,டீக்கடையில் டீ ஆற்றுவது,அயன் பண்ணி தருவது,அடி பம்பில் தண்ணீர் அடித்து தருவது,என கலர் கலராக நடித்து வரும் வேளையில்
எந்தவித நடிப்பும் பந்தாவும் இல்லாமல் இயல்பாக தான் தனது வார்டில் செய்யப்போகும் திட்டங்களை மட்டும் பொது மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்து வரும் நிலையில் நடுநிலை பொதுமக்கள் அனைவரும் இவருக்கு வாக்கு அளிப்பதாக உறுதி அளித்து உள்ளனர்.
உதாரணமாக தனது வாழ்வில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு அகாடமி தொடங்குவது,
காவல்துறை உதவியுடன் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி அமைத்து பாதுகாப்பை பலப்படுத்துவது,
மற்றும் அனைவரும் கூறுவது போல் சாலை வசதி,சாக்கடை வசதி.தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதுஎன உறுதி கூறுவதுடன்
பொது மக்களின் பிரச்சினைகளை, குறைகளை 24 மணி நேரமும் தீர்த்து வைக்க அனைத்து தெருக்களிலும் உள்ள நண்பர்கள் மூலம் ஒவ்வொரு தெருவிலும் உதவி மையம் ஏற்படுத்தித் தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இவரது இனிமையான, எளிமையான பழக்கத்தாலும், தனது அருமையான திட்டத்தின் மூலமும் பொதுமக்களை பெரிதும் ஈர்த்துள்ள J.சார்லஸ் டிக்கன்ஸ் வெற்றிபெற நாற்பத்தி ஏழாவது வார்டு பொதுமக்களே வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.