மக்களுக்காக என் குரல் ஒலிக்கும்:
உங்களில் ஒருவராக இருந்து பணியாற்ற வாய்ப்பு தாருங்கள்.
16-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் A.தெய்வ மணிகண்டன் உருக்கம்.
திருச்சி மாநகராட்சி 16- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் வட்டச்செயலாளர் தெய்வ மணிகண்டன் போட்டியிடுகிறார்.
கடந்த 2011 முதல் 2016 வரை இவரின் சகோதரி அன்புச்செல்வி அ.தி.மு.க. கவுன்சிலராக பதவி வகித்தார். அப்போது பல கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளார்.
நீண்டகாலமாக அரசியலில் பயணிக்கும் தெய்வ மணிகண்டன் குடும்பத்தினர் மீது வார்டு மக்களுக்கு மிகுந்த மதிப்பும்,மரியாதையும் உள்ளது.
இதனால் தேர்தல் களத்தில் தெய்வ மணிகண்டனுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.
மற்ற வேட்பாளர்கள் கதவைத் தட்டி ஓட்டு கேட்டால் கூட வெளியே வர மறுக்கும் பொதுமக்கள்
இவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலையென திரண்டு வந்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.
வேட்பாளர் தெய்வமணிகண்டன் கூறும்போது, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வார்டு மக்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். மக்கள் சேவை மகேசன் சேவை என்ற உன்னத நோக்கோடு மக்கள் பணியாற்றி வருகிறேன்.
உங்கள் பிரச்சனையை வாதாடி, போராடி தீர்த்து வைப்பதற்கு மீண்டும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இந்தத் தேர்தல் உங்கள் பிரச்சனையை செவிமடுத்துக் கேட்டு தீர்க்கும் நபரை தேர்வு செய்யும் களம் என்பதை புரிந்து இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் இந்த வார்டில் நான் வெற்றி பெற்றால் என்றும் இந்த மக்களுக்கு விசுவாசமாக இருந்து பணியாற்றுவேன். உண்மையான மக்கள் தொண்டனாக இருப்பேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது வார்டு மக்களுக்காக திருச்சி மாநகராட்சியில் எனது குரல் ஒலிக்கும். இந்த வார்டை முன்மாதிரி வார்டு ஆக மாற்றி காட்டுவதே என் லட்சியம். இந்த லட்சிய கனவை நிறைவேற்ற மீண்டும் இரட்டை இலைக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார்.