30-வது வார்டு அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க பம்பர சின்னத்தில் வாக்களியுங்கள். மதிமுக வேட்பாளர் கதிஜா
திருச்சி மாநகராட்சி 30-வது வார்டில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் கதிஜா தமது வார்டுக்குட்பட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று தமக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களிக்கும்படி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறும்போது:-
இந்த வார்டில் உள்ள பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வேன்,
எந்நேரமும் பொது மக்கள் தங்கள் குறைகளைக் கூற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்காக உழைக்க உங்களில் ஒருவரான என்னை மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது அவருடன் மதிமுக பகுதி செயலாளர் மனோகரன், சுல்தான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.