திருச்சி 57 வது வார்டு அதிமுக வேட்பாளர் சிங்காரவேலனுக்கு ஆதரவாக வெல்லமண்டி நடராஜன், ரத்தனவேல் பிரச்சாரம்.
திருச்சி 57 வது வார்டு அதிமுக வேட்பாளர் சிங்காரவேலனை ஆதரித்து திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி. ரத்தினவேல் ஆகியோர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருச்சி 57 வது வார்டு பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர் சிங்காரவேலன். அப்பகுதி பொதுமக்களிடம் எளிமையாகப் பழகக் கூடியவர்.
எப்போதும் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைக்க பாடுபடுபவர்.
தன்னை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் அப்பகுதியில் அலுவலகம் அமைத்து உள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் எம்.பியும் இவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதன் மூலம் சிங்காரவேலனின் வெற்றி வாய்ப்பு உறுதி ஆகி உள்ளது என கூறப்படுகிறது.