Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

15வது ஐபில் கிரிக்கெட் ஏலம். முதல் நாளில் விலை போகாத முன்னனி வீரர்கள்….

0

 

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கிறது.

ஏலத்தின் போது திறமை வாய்ந்த வீரர்களை அணி நிர்வாகங்கள் தங்கள் அணிக்காக போட்டி போட்டுக்கொண்டு எடுத்துவரும் நிலையில், சில முக்கியமான நட்சத்திர வீரர்களை அடிப்படை விலைக்கு கூட யாரும் எடுக்க முன்வரவில்லை.

அந்த வகையில், சென்னை அணியில் பல ஆண்டுகளாக விளையாடிவந்த சுரேஷ் ரெய்னாவை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அவரை சென்னை அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

அதேபோல ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் கடந்த சீசன்களில் டெல்லி, ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.

மேலும், இந்திய அணியின் வேகப்பந்துவேச்சாளரான உமேஷ் யாதவ், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாகா மற்றும் தென் ஆப்பிரிகாவின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலியாவின் மேத்தீவ் வேட், ஆடம் ஜாம்பா, இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ், வங்காளதேசத்தை சேர்ந்த ஷகிப் அல் ஹசன், மற்றும் ஆப்கானிஸ்தானின் முகம்மது நபி, போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.