தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நல சங்கம் நடத்தும் இலவச தையல் பயிற்சி துவக்க விழா திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி புத்தாநத்ததில்
தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக இலவச தையல் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் வீர சங்கர் தலைமையில் இலவச தையல் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவின் ஆரம்பமாக புத்தாநத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து தையல் தொழிலாளர்கள் அனைவரும் பேரணியாக நடந்து சென்று புத்தாநத்தம் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு சமத்துவக் தையல் தொழிலாளர் நல சங்கத்தின் கொடியை மாநில பொதுச்செயலர் வீர சங்கர் அவர்கள் ஏற்றி வைத்து பேரணியாக புறப்பட்டு புத்தாநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நல சங்கத்தின் இலவச தையல் பயிற்சி துவக்க விழாவின் மேடையில் மாநில பொது செயலாளர் வீரசங்கர் அவர்கள் சிறப்புரையாற்றி ஆற்றினார்.
இவ்விழாவில் மாநில செய்தி தொடர்பாளர் பழனிவேல்,
கொள்கை பரப்பு செயலாளர் பெருமாள் , மகளிர் அணி பிரிவு சிவகங்கை மாவட்ட சுமதி தலைமை தாங்கினார்கள்.
தமிழ்நாடு சமத்துவத்துக்கான தையல் தொழிலாளர் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் ரபீக் முகமது,
விஜிலன்ஸ் புலனாய்வு பத்திரிகை தலைமை நிருபர் சித்திரவேல் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையும், நலிந்த தொழிலாளர்களுக்கு வெகுமதியும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.
இவ்விழாவை ஒருங்கிணைப்பாளர் எம்சி இளையராஜா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.