திருச்சி 34 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் துணைமேயர் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பு.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் ஜெ.சீனிவாசன் நேற்று காலை சங்கிலியாண்டபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
பாரதியார் நகர், வசந்தம் நகர் மற்றும் மணல்வாரித்துறை ரோடு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்தார்.
குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார், இவ்வாறு மக்களின் மனதை கவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பில் அவைத்தலைவர் ரஹீம், இணை செயலாளர் ரஹ்மத், அம்மா பேரவை செயலாளர் ஹனிபா மற்றும் இன்ஜினியர் ரமேஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.