Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 24 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணிக்கு வழி நெடுகிலும் பெண்கள் உற்சாக வரவேற்பு.

0

திருச்சி 24வது வார்டு
காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி தீவிர வாக்கு சேகரிப்பு.

திருச்சி மாநகராட்சி 24-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மக்களின் குரலாக ஒலித்து, மக்களுக்காக பாடுபடுவேன் என உறுதியளித்தார்.

திருச்சி மாநகராட்சி 24வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோபியா விமலா ராணி களம் காண்கிறார்.

அவர் புத்தூர் அக்ரஹாரம் தெற்கு, முத்துராஜா தெரு பகுதிகளில் தீவிர வாக்கு வேட்டை ஈடுபட்டார்.
வீடு வீடாக சென்று மக்களிடம் சோபியா விமலா ராணி வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் வழிநெடுகிலும் நின்று அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

பிரச்சாரத்தின் போது சோபியா விமலா ராணி பேசும்போது,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த வார்டில் மக்களின் எந்த அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்படவில்லை.
நான் வெற்றிபெற்றால் மக்களின் குரலாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் செயல் ஆற்றுவேன். உங்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் .

குறிப்பாக புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்க உறுதியாக நடவடிக்கை எடுப்பேன். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் கே. என். நேரு ஆகியோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் .24- வது வார்டில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர, அனைத்து நலத்திட்டங்களும் கிடைத்திட, முன்மாதிரி வார்டாக மாறிட திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் எனக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.