நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி இருதயபுரம், கீழபடையாட்சி தெரு, மல்லிகைபுரம், தர்மநாதபுரம், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய திருச்சி மாநகராட்சி 32 வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயநிர்மலா தமக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கீழபடையாட்சி தெருவில் வாக்கு சேகரித்தார்.
திமுக 32வட்டச் செயலாளர் சுரேஷ், வட்ட பிரதிநிதி மோகன், தனுஷ்கோடி, கனகராஜ், கோவிந்தன்,
காப்பிக்கொட்டை சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஜெய நிர்மலாவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.